இலங்கையின் சுயாதீன தன்மையை தான் உள்ளிட்ட சீன அரசாங்கம் பெரிதும் மதிக்கின்றது எனத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஹு ஜின்தாவோ (Hu Jintao) இலங்கையின் உள்ளக நடவடிக்கைகளுக்கு தாக்கம் ஏற்படுத்துகிற புறச்சக்திகளுக்கு சீனா எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
இலங்கை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சீன ஜனாதிபதி ஹு ஜின்தாவோ அவர்கள், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை அரசியலில் உறுதியான நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும் அபிவிருத்தியும் வேகமாக நடைபெறுகிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்தியது தொடர்பாகவும் அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்த கொடுத்தது தொடர்பாகவும் பாராட்டுத் தெரிவித்த ஹு ஜின்தாவோ அவர்கள் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு தொடர்ச்சியாக தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தது தொடர்பாகத் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கிடையில் அனைத்து துறைகளிலும் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
சீனாவிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பை பெரிதும் மதிப்பதாகத் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி, அது தொட்பில் இலங்கை மக்களின் நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்திக் கொள்வது தொடர்பாகவும் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment