Friday, June 17, 2011

அனாதை குழந்தைகளுக்கு இனி அதிபர் ஜர்தாரி தான் தந்தை: பாகிஸ்தான் அறிவுப்

Best Blogger Tips
பெற்றோர் முகவரி தெரியாத சட்டப்படி பிறந்த அனாதை குழந்தைகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் தந்தை என்ற இடத்தில் தன்னுடைய பெயரை பயன்படுத்திக் கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் அசிப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகை ஒன்றுக்கு அந்நாட்டின் தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையத் தலைவர் மாலிக் தேரிக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 2005ம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போதும், இதையடுத்து கடந்தாண்டில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.
மேலும் சட்டப்படி பிறந்த பல குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்பட்டு தற்போது நாட்டின் சமூக நலத்துறை மையங்களில் தங்கி வருகின்றனர். இக்குழந்தைகளை அவர்களது பெற்றோர்களே இந்த மையத்தில் அனாதையாக விட்டுச் சென்றனர்.
சமீபத்தில் இக்குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்குவதில் தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. இதுபற்றி அதிபருக்கு தெரியவரவே அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் தந்தையின் பெயராக தன்னுடைய பெயரை சேர்க்க அதிபரே முன்வந்து கேட்டுக் கொண்டார்.
சவுதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளில் உள்ள சில இஸ்லாமிய பள்ளிகளில் இக்குழந்தைகளை சேர்க்க தேசிய புள்ளியியல் மற்றும் பதிவு ஆணையம் தொடர்பு கொண்ட போது "ஆதாம்" மற்றும் "ஏவாள்" பெயராக பெற்றோர் பெயர் இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த விடயத்தை கையாள்வதில் முன்னணி இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளின் மத குருக்களின் ஆலோசனை பெறப்பட்டது. இவ்வாறு மாலிக் தேரிக் கூறினார்.
News:Lankasri

0 comments:

Post a Comment