
ஜனாதிபதியைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்களின் தவறான ஆலோசனைகள் காரணமாகவே இலங்கைக்கு சர்வதேச நெருக்கடிகள் உருவாகக் காரணமாக அமைந்திருப்பதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சுற்றியுள்ள சில ஆலோசகர்கள் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், அவரது அண்மைக்கால அரசியல் மௌனம் குறித்து வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனது புதல்விக்கு குழந்தை பிறந்திரு்ந்த காரணத்தினால் வெளிநாடு சென்றிருந்தாகவும், ஜனாதிபதியை சூழ அதிகளவான ஆலோசகர்கள் இருப்பதாலும் அவர்களின் நடவடிக்கை காரணமாகவும் தான் அமைதியாக இருப்பதாகவும் அமைச்சர் பசில் கூறியுள்ளார்.
பான்-கீ-மூன் குழுவின் அறிக்கை மற்றும் சனல்4 தொலைக்காட்சி ஆகியவற்றின் குற்றச்சாட்டுகளினால் சர்வதேச ரீதியில் எழுந்துள்ள நிலைமை தொடர்பில் சரியான புரிந்துணர்வுடன் பதிலளிப்பதற்கு பதிலாக சிங்கள மக்களை மகிழ்விப்பதற்காக செய்தி அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பலனில்லை என தெரிவித்துள்ள பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு எதிரான எதிர்ப்பின் வலுவான தன்மையை கடந்த சில நாட்களாக தான் வெளிநாட்டில் இருந்த போது நன்கு உணர்ந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
News:Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment