Wednesday, June 8, 2011

சீனாவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்

Best Blogger Tips
சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
காலை 9.54 மணிக்கும், 10 மணிக்கும் நடைபெற்ற அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் 4.2 எனவும், 4.1 எனவும் ரிக்டர் அளவுகோலில் அளவிடப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.
காணாமல் போன 37 பேரை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பலரை காணாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
News: Lankasri

0 comments:

Post a Comment