Wednesday, June 8, 2011

மரணத்தை வரவேற்கிறேன்: கடாபி

Best Blogger Tips

லிபிய ஜனாதிபதி கடாபி தனது நாட்டுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மரணிக்கும் வரை போராடப் போவதாக கடாபி அறிவித்துள்ள அதேவேளை லபியா மீதான தாக்குதலை அதிகரிக்கப்போவதாக மேற்குநாட்டுப் படைகள் அறிவித்துள்ளன

மரணத்தை வரவேற்பதாகவும், மேற்கு நாடுகளை எதிர்த்து மரணிக்கும்வரை போரிடப் போவதாகவும் கடபரி அறிவித்துள்ளார்.மேற்படி தகவல் அடங்கிய அவரது குரல் பதிவை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நேற்று செவ்வாய்கிழமை ஒளிபரப்பாக்கியுள்ளது. 

இக்குரல் பகுதிவில் அவர் தனது ஆதரவாளர்களை திரிபோலியில் உள்ள இல்லத்தில் கூடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்படி தகவலானது கடாபியின் பாப் அல் அஸீசியா இல்ல வளாகத்தில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னரே வெளியாகியுள்ளது. 

கடாபியின் இல்ல வளாகத்தை இலக்கு வைத்து நேட்டோ படைகள் நேற்று பல தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேட்டோ படைகள் லிபிய இராணுவத்திற்கெதிரான படைநடவடிக்கைகளை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்தது.  அதிபர் பதவியிலிருந்து கடாபி இறங்க மறுப்பதால், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment