Tuesday, June 28, 2011

ரிஸானா தண்டனை தொடர்பான தகவல் மறுக்கபட்டுள்ளது

Best Blogger Tips
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கின் மரண தண்டனையை நிறைவேற்ற சவூதி அரேபிய அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளதாக நேற்று SMS ஊடாக பரவிய செய்தியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மறுத்துள்ளது மேலும் தாம் இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக்கை விடுதலை செய்ய கடுமையாக முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் சில வெளிநாட்டு ஆங்கில இணையத்தளத்திலும்  இந்த மரண தண்டனை செய்தி வெளியானமை குறிபிடத்தக்கது .
குழந்தையொன்றை கொலை செய்தாரென்ற குற்றச்சாட்டின் பேரில் 2005 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ரிஸானா நபீக் சவூதி அரேபியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தவாத்மி மேல் நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிஸானா நபீக்கு மரண தண்டனை விதித்திருந்தது விரிவாக
இதன் பின்னர் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஹொங்கொங்கை தலைமையகமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிதி உதவியுடன் ரிஸானா நபீக் சார்பாக சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் பிரகாரமே ரிஸானா நபீக் மீதான தவாத்மி மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ரியாத்திலுள்ள உயர் நீதிச் சபையில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீடு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது அப்துல்லா அல் ரொசாமி தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனை விசாரித்து குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கினர்
ரிஸான விடையத்தில் இலங்கை ஜனாதிபதி ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று சவுதி மன்னரிடம் கோரிக்கை விடுத்தார் அகில இலங்கை ஜம்மியதுள் உலமா ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பில் அந்நாட்டு உலமாக்கள் மூலமாக ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது சம்மந்தப்பட்ட சவூதி பெற்றோரிடம் மன்னிப்பு வழங்குமாறு இலங்கை மக்கள் சார்பாக கேட்டு கொள்வதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் ரிஸானாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான போதும் அது உறுதிப்படுத்தப்படவில்லை தற்போது அவர் உளநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
இந்த மாதம் 17 ஆம் திகதி இலங்கை கைத்தொழில்துறை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ரியாத் ஆளுநர் சல்மான் பின் அப்துல் அஸீஸைச் சந்தித்து . ரிஷானாவின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.
ஆனால் வேறு சில வெளிநாட்டு ஆங்கில இணையத்தளத்திலும் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இந்த மரண தண்டனை செய்தி வெளியானமை குறிபிடத்தக்கது.
News:Lankamuslim

0 comments:

Post a Comment