லெபனானில் பணிபுரியும் இலங்கைப் பணிப்பெண்ணுக்கு பானத்தில் ஆணிகளை கலந்து கட்டாயப்படுத்தி அருந்தக் கொடுத்துள்ளதால் தற்போது குறித்த பெண் அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலியைச் சேர்ந்த மூன்றரை வயது குழந்தையின் தாயான இந்திக்கா மல்கான்தி என்ற பெண்ணே தற்போது சிகிச்சைக்காக லெபனான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இலங்கைப்பெண் இலங்கையில் உள்ள தனது கணவனிடம் இச்சம்பவம் குறித்து நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலம் அறியப்படுத்தியுள்ளதாகவும், அங்கு தொழில் வழங்குநரால் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறியுள்ளதுடன் உடனடியாக தன்னை சொந்த நாட்டிற்கு திருப்பி எடுக்குமாறு கூறியுள்ளார்.
இந்திக்கா மல்கான்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக லெபானிற்கு பணிப்பெண்ணாக சென்று 6 மாதங்களாகின்றது என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார். மல்கான்திக்கு அவரது வீட்டு எஜமானி கடந்த இரு வாரங்களாக ஆணிகளை பானத்துடன் கலந்து கட்டயாப்படுத்தி அருந்தக் கொடுத்துள்ளார். அதன்பின் குறித்த பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்கான்தியின் கணவன், லெபனானிற்கு பணிப்பெண்ணாக அனுப்பிய முகவரகத்துடன் தொடர்பு கொண்டு அவரை இலங்கைக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியதற்கு 2 இலட்சம் செலுத்தும்படி முகவரகம் தெரிவித்துள்ளது

News:Yarlmuslim

Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment