இலங்கைலிருந்து படகுகளை கொள்வனவு செய்வதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. இலங்கையைத் தளமாகக் கொண்ட கப்பல் நிர்மாண நிறுவனமொன்றிடமிருந்து 80 அதிவேக இடைமறிப்புப் படகுகளை சுமார் 300 கோடி இந்திய ரூபாவுக்கு வாங்குவதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது.
மும்பை தாக்குதல்களையடுத்து கரையோர ரோந்து நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக இப்படகுகளை வாங்கப்படவுள்ளன. இப்படகுகள் இந்திய கடற்படையின் புதிதாக அமைக்கப்பட்ட படைப்பிரிவான சாகர் பிராஹரி பால் மற்றும் அக்கடற்படையின் ஏனைய பிரிவுகளால் பயன்படுத்தப்படவுள்ளதாக இந்தய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையைத் தளமாகக் கொண்ட எனும் நிறுவனத்திடமிருந்து இப்படகுகளை வாங்குவதற்கான ஒப்பந்த நடைமுறைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் ஒப்பந்த நடைமுறைகள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவ்வதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment