Friday, July 1, 2011

தேசிய அடையாள அட்டை சர்ச்சை தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல் காதர்

Best Blogger Tips
தேசிய அடையாள அட்டைக்காக புகைப்படங்களில் முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக சுற்றாடல் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஜகத் வி. விஜேவீரவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சில் இன்று முதலாம் திகதி விசேட கூட்டமொன்று நடத்தப்படும் என்று ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தம்மிடம் கூறியதாகவும் பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் தெரிவித்துள்ளார் விரிவாக
தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பியோ அல்லது ஹிஜாப் மற்றும் முக்காடு அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பது குறித்து முன்னொரு போதுமே சர்ச்சை எழுந்தது கிடையாது. பயங்கரவாதம் நிலவிய போது கூட இது பிரச்சினையாகவில்லை. நான் சுமார் 25 வருடங்களாகத் தொடராக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன்
ஆனால் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அமைதி, சாமாதானத்தை ஏற்படுத்தியுள்ளார். அத்தோடு இன, மத, மொழி, பிரதேச பேதங்களைப் பாராது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். எமது ஜனாதிபதி ஒரு போதுமே இன ரீதியாக சிந்திக்காதவர் என்றும் இப்படியான நிலையில் தேசிய அடையாள அட்டைக்காக முஸ்லிம்கள் தொப்பி மற்றும் ஹிஜாப் அணிந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதை சர்ச்சையாகி இருப்பது ஆச்சரியத்தையும் கவலையும் தருகின்றது என்றும்.
ஆகவே தற்போது எழுந்துள்ள இச் சர்ச்சையை நியாயமாகவும், சுமுகமாகவும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அவருடனான சந்திப்பு திருப்திகரமானதாக அமைந்திருந்தது. அதனால் இன்றைய விசேட கூட்டத்தில் திருப்திகரமான முடிவுகள் வெளியாகலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹகீம் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகதிற்கு எழுத்துமூலம் அறிவிதுள்ளமையும் குறிபிடத்தக்கது.
News:Lankamuslim

0 comments:

Post a Comment