2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
நடத்திய பின் இந்தியா , அணுவாயுதங்களை ஏவக்கூடிய ஏவுகணைகளை தனது மேற்கு
எல்லை நோக்கி நகர்த்தியதாக அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்க செயலாளர்
கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு
அமெரிக்கா கொடுத்த அழுத்தங்களுக்கும் இந்தியா பணிய மறுத்தாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
அக்காலத்தில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் தேசிய
பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய கொண்டலீஸா ரைஸ், தனது அனுபவங்களை வைத்து 'No Higher Honor' என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்நூல் அடுத்த வாரம் சந்தைக்கு வரவுள்ளது.
தெற்காசிய விவகாரம் தொடர்பாக அப்போது சி.ஐ.ஏ.வுக்கும் அமெரிக்கா இராணுவத்
தலைமையகமான பெண்டகனுக்கும் இடையில் தெளிவான முரண்பாடுகள் இருந்தாகவும் அவர்
கூறியுள்ளார்.
இந்தியா யுத்தத்தை நோக்கிச் செல்வதாக சி.ஐ.ஏ. கூறியது எனவும் ஆனால் அதை பெண்டகன் மறுத்தாகவும் ரைஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பாஷையையே சி.ஐ.ஏ. பேசியது என்கிறார் கொண்டலீஸா ரைஸ். இந்திய
தம்மை தாக்கத் தயாராகிறது என முழு உலகும் குறிப்பாக அமெரிக்கா நம்ப
வேண்டும் என பாகிஸ்தான் கருதியது எனவும் அவர் கூறியுள்ளார்.
'ஆயுத மோதல் தவிர்க்கப்பட முடியாது, ஏனெனில் பாகிஸ்தானை தண்டிப்பதற்கு
இந்தியா ஏற்கெனவே தீர்மானித்துவிட்டது என சி.ஐ.ஏ. நம்பியது. அநேகமாக இதுவே
நாம் நம்ப வேண்டிய விடயம் என இஸ்லாமாபாத் கருதியது' என கொண்டலீஸா ரைஸ்
கூறியுள்ளார்.
'அமெரிக்காவை பல தசாப்தங்களாக சந்தேகக் கண்ணுடன் பார்த்த நாடான
இந்தியாவிலிருந்து சி.ஐ.ஏ. பல வருடங்கள் தனிப்பட்டிருந்தது. 2001 ஆம்
ஆண்டில் சி.ஐ.ஏ. அதிகமாக பாகிஸ்தானின் தகவல் மூலங்களில்; தங்கியிருந்தது'
எனவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.
Sunday, October 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment