Sunday, October 30, 2011

தனியார்பஸ் கட்டணம் அதிகரிக்கும்..!

Best Blogger Tips
பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கம் டீசல் விலையை அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதென அந்த சங்கத்தின் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். 

டீசல் விலை அதிகரிப்பால் குறுந்தூரம் செல்லும் பஸ்களுக்கு நாளாந்தம் 600 ரூபாவும் நெடுந்தூரம் செல்லும் பஸ்களுக்கு நாளாந்தம் 1200 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால் உடனடியாக பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

0 comments:

Post a Comment