உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடைபெறும் பிரதேசங்களிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் நாளையதினம் 7ஆம் திகதி மூடப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் 8ஆம் திகதி 13 மாவட்டங்களில் உள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களாக குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பாடசாலைகள் 9ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.கொழும்பு டீ.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் நேற்று 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையும், கம்பஹா தக்ஷிலா மகா வித்தியாலயம், ஹம்பாந்தோட்டை சுவி தேசிய பாடசாலை என்பன இன்று 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையிலும், பதுளை விசாகா மகளிர் மகா வித்தியாலயம் நாளை 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையிலும் மூடப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித் துள்ளது.
கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, குருநாகல், அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 8ஆம் திகதி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
இதேவேளை, தேர்தல் தினமான 8ஆம் திகதி தேர்தல்கள் நடைபெறும் மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
News: Thinakaran (கே.அசோக்குமார், மகேஸ்வரன் பிரசாத்)



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment