Wednesday, October 5, 2011

மாணவிக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Best Blogger Tips
யாழ்- வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வி கற்க பாடசாலை நிர்வாகம் மறுத்து விட்டது. எனினும் மனித உரிமை ஆணைக் குழுவின் தலையீட்டின் பின்னர் அந்த மாணவி மீண்டும் பாடசாலைக்கு நேற்றுச் சென்றிருந்தார். அந்தவேளை சிலரின் தூண்டுதலால் அந்த மாணவியை பாடசாலையில் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிக்கு எதிராக சகமாணவர்களே நடத்திய இந்தப் போராட்டம் குறித்துத் தெரியவருவதாவது:

குறித்த பாடசாலையின் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வி கற்பதற்கு ஈவினையைச் சேர்ந்த சி.சங்கீதா என்ற மாணவிக்குப் பாட ஆசிரியர் அனுமதி மறுத்தார்.ஆனால் மாணவி உயிரியல் பாடம்தான் கற்கவேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். இந்த நிலையில் பாடசாலை நிர்வாகம் மாணவியின் விருப்பத்துக்கு மறுப்புத் தெரிவித்து பாடசாலையை விட்டு வெளியேறுமாறு பணித்தது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக மாணவியின் பெற்றோர் கடந்தவாரம் யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடினர்.பெற்றோரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து மனித உரிமை ஆணைக்குழு மேற்படி பாடசாலை அதிபரை அழைத்து மாணவியின் விருப்பத் தெரிவுப் பாடத்தை கற்க அனுமதிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.இதனை அடுத்து மாணவியும் பெற்றோரும் பாடசாலைக்கு நேற்றுச் சென்றிருந்தனர். இந்தச் சமயத்தில்தான் பாடசாலை உயர்தர வகுப்பு மாணவர்கள் அவர்களை உள்ளே விட்டு வாயிலைப் பூட்டி வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன்போது குறித்த மாணவியை பாடசாலையில் கற்க அனுமதிக்கக் கூடாது என்று மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன், வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் இராஜேந்திரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுந்தரசிவம் ஆகியோர் பாடசாலைக்குச் சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.மாணவி, தொடர்ந்து உயிரியல் பாடப் பிரிவில் கற்பதற்கான முடிவு எடுக்கப்பட்டபோதும் மாணவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.குறித்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஓரிருவரின் தூண்டுதலிலேயே தமது சக மாணவிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
News : Yarlmuslim

0 comments:

Post a Comment