
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஐ.தே.க. வின் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படுவதாக புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இன்று காலை எஸ்.ஐ.எஸ் எனப்படும் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கியுள்ள இரகசிய அறிக்கையின் பிரகாரம் கொழும்பு தவிர்ந்த ஏனைய மாநகராட்சிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து, ஐ.தே.க.வின் செல்வாக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புக் காணப்படுகின்றது.
அதன் பிரகாரம் தற்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் இம்முறை ஐ.தே.க. சற்று அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்று எதிர்பார்;க்கப்படு;கின்றது.
ஆயினும் கொழும்பில் மட்டும் ஆளுங்கட்சிக்கு சற்று வாக்குகள் அதிகரித்துள்ள போதிலும், மாநகராட்சியை ஐ.தே.க.வே கைப்பற்றும் என்றும் புலனாய்வு அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைகளே கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் ஆளுங்கட்சி சற்று அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமையவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News: Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment