Sunday, October 9, 2011

கொழும்பு மாநகரசபை மீண்டும் ஜதேகட்சி வசம்

Best Blogger Tips
கொழும்பு மாநகரசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 24 ஆசனங்களைப் பெற்று ஐதேக வெற்றி பெற்றுள்ளது. 

ஆனாலும் 53 ஆசனங்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு ஐதேக மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறவேண்டிய நிலையில் உள்ளது. 

சற்று முன் வெளியிடப்பட்ட இறுதி முடிவுகளின் அடிப்படையில் கொழும்பு மாநகரசபையில் ஐதேகவுக்கு 24 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 16 ஆசனங்களும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கு 6 ஆசனங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு தலா 2 ஆசனங்களும், சுயேட்சைக்குழு-1, சுயேட்சைக்குழு- 2 மற்றும் ஜேவிபிக்கு தலா 1 ஆசனங்களும் கிடைத்துள்ளன. 

அறுதிப் பெரும்பான்மைக்கு 27 ஆசனங்களைப் பெறவேண்டியுள்ள நிலையில், ஐதேக 24 ஆசனங்களையே பெற்றுள்ளது. 

இந்தநிலையில் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவைப் பெறுவதன் மூலமே ஐதேகவினால் நிலையான ஆட்சியை அமைக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இல்லையேல், இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள், சுயேட்சைகளின் ஆதரவை ஐதேக பெற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு மாநகரசபைத் தேர்தல் இறுதி முடிவு 

ஐக்கிய தேசியக் கட்சி- 101,920 வாக்குகள் � 24 ஆசனங்கள் 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- 77,089 வாக்குகள் � 16 ஆசனங்கள் 
ஜனநாயக மக்கள் முன்னணி� 26,229 வாக்குகள் - 6 ஆசனங்கள் 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 9,979 வாக்குகள் - 2 ஆசனங்கள் 
ஜனநாயக ஐக்கிய கூட்டமைப்பு- 7830 வாக்குகள் - 2 ஆசனங்கள் 
சுயேட்சைக்குழு 2- 4085 வாக்குகள் - 1 ஆசனம் 
ஜேவிபி- 3162 வாக்குகள் � 1 ஆசனம் 
சுயேட்சைக்குழு 1 � 2962 வாக்குகள் - 1 ஆசனம் 

கொழும்பு மாநகரசபைக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஐதேக அதிகளவு வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் உள்ளது. 

கொழும்பு மாநகரசபையின் தொகுதி வாரியான முடிவுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ள போதும் இன்னமும் இறுதியான முடிவும், ஆசன ஒதுக்கீடும் அறிவிக்கப்படவில்லை. 

எனினும் ஐதேக அதிக ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது. 

இங்கு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி 26 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. 

மத்திய கொழும்பில் ஐதேக 40,369 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 28,504 வாக்குகளையும் பெற்றுள்ளன. இங்கு மனோ கணேசன் தலைமையில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி 6216 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

கொழும்பு கிழக்கில் ஐதேக 15,779 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,370 வாக்குகளையும், ஜனநாயக மக்கள் முன்னணி 4056 வாக்குகளையும் பெற்றுள்ளன. 

கொழும்பு வடக்கில் ஐதேக 20,415 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கூட்டணி இங்கு 14,443 வாக்குகளை பெற்றுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி 10,009 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

பொறளையில் ஐதேக 16,930 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. இங்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13,196 வாக்குகளையும், ஜனநாயக மக்கள் முன்னணி 1467 வாக்குகளையும் பெற்றுள்ளன. 

கொழும்பு மேற்கில் ஐதேக 8,289 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6188 வாக்குகளையும் பெற்றுள்ளன. இங்கு ஜனநாயக மக்கள் முன்னணி 4473 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

கொழும்பு மாநகரசபைக்கான அஞ்சல் வாக்களிப்பில் ஆளும் கூட்டணி 388 வாக்குகளையும், ஐதேக 138 வாக்குகளையும் பெற்றுள்ளன. 

இறுதி முடிவு, ஆசன ஒதுக்கீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன


News: Manithan

0 comments:

Post a Comment