Saturday, October 15, 2011

துமிந்த சில்வாவின் மூளையில் சிக்கியுள்ள ரவையை அகற்ற அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வருகின்றனர்

Best Blogger Tips
சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்கள் கொழும்பு வரவுள்ளனர். 

முல்லேரியா துப்பாக்கி மோதலில் படுகாயமடைந்த துமிந்த சில்வாவின் தலையில் இருந்து, நான்கு மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் இரண்டு துப்பாக்கி ரவைகள் அகற்றப்பட்டிருந்தன. 
ஒரு ரவை மண்டையோட்டில், மூளைக்குப் பின்பறமாக செருகியுள்ளதால் அதனை அகற்ற முடியாதுள்ளது. 

அவர் குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறினாலும், மூன்று மாதங்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கியிருக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. 

மூளைப் பகுதியைத் தாக்கிய துப்பாக்கி ரவையை மண்டையோட்டில் இருந்து அகற்றுவதற்கு இரண்டு அமெரிக்க நரம்பியல் நிபுணர்களை கொழும்புக்கு அழைத்து வர சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இவர்கள் இருவரும் சிங்கப்பூர் மருத்துமனையொன்றில் பணியாற்றி வருகின்றனர். 

துமிந்த சில்வாவை சிங்கப்பூர் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவே அவரது குடும்பத்தினரும், சிறிலங்கா பாதுகாப்புசெயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் விரும்பினர். 

ஆனால் சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனை மருத்துவர்கள் அதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளனர். 

துமிந்த சில்வாவின் உடல் நிலை வேறெங்கும் கொண்டு செல்லத தக்க நிலையில் இல்லை என்றும், அவ்வாறு கொண்டு செல்வதால் உயிராபத்து ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையிலேயே சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கக மருத்துவ நிபுணர்களை சிறிலங்கா அரசாங்கம் கொண்டு வரவுள்ளது.


News: Puthinapalahai

0 comments:

Post a Comment