ஹஜ் கட்டண உச்சத் தொகையான 3 இலட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கு அதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக ஹஜ்ஜாஜிகள் தங்களுக்கு முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாடுகள் குறித்து ஒரு குழுவை நியமித்து தக்க விசாரணைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்கள் கூடுதலான தொகையை அறவிட்டிருப்பது இந்த குழுவின் விசாரணையின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை ஆளுனர் அலவி மெளலானா தெரிவித்துள்ள தகவலில் ஹஜ் பயண முகவர்கள் பொறுப்புடன் செயற்படுவது அவசியம். இந்த சந்தர்ப்பத்தில் அதிக இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. இது எமது சமயக் கடமை. அதை நிறைவேற்றச் செல்லுவதற்காக கட்டணத்தை இலகுபடுத்திக் கொடுப்பது முகவர்களின் பொறுப்பு.
இதை விடுத்து ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்பவர்களிடம் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கு மேலதிகமாக அறவிடும் ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த முறை அவர்களுக்கான லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவத்துள்ளா
News: Lankamuslim



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment