Friday, October 21, 2011

சுடாதீர்கள்.. சுடாதீர்கள்.. கடாபியின் இறுதி நிமிடங்கள்..!

Best Blogger Tips
லிபியாவை 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபி, 69, தன் சொந்த ஊரான சிர்டியில், கிளர்ச்சிப்படையினருடன் நடந்த சண்டையில்  வபாத்தானார். இந்தச் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கரும்வபாத்தானார்..
மேற்கு ஆப்ரிக்க நாடான லிபியாவில் எண்ணெய் வளம் அதிகம். இந்த நாட்டின் ஆட்சியை, 1969ம் ஆண்டு ராணுவ கேப்டனாக இருந்த கடாபி, புரட்சி மூலம் கைப்பற்றினார்.


கடந்த 42 ஆண்டு காலம் ஆட்சி செய்த கடாபியை பதவி விலகும்படி, அவரது அமைச்சரவையிலிருந்த சிலர் வற்புறுத்தினர். இதனால், கிளர்ச்சி ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்கள் மீது கடாபி படையினர் விமான தாக்குதல் நடத்தினர். இதில், நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் சண்டையிட்டதால், கடாபி ஆதரவு படைகள் பின்வாங்கின.


"கடாபி சரணடைய வேண்டும்' என, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தின. ஆனால், இதை கடாபி மறுத்து விட்டார். நெதர்லாந்தில் உள்ள சர்வதேச கோர்ட், கடாபியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. எனினும் தலைநகர் டிரிபோலி, கடாபியின் சொந்த ஊரான சிர்டி ஆகியவற்றில் தொடர்ந்து சண்டை நடந்து வந்தது. கிளர்ச்சிப் படைகளின் கை ஓங்கியதில், சமீபத்தில் தலைநகர் டிரிபோலி கைப்பற்றப்பட்டது. ஆட்சியை இழந்த நிலையில், கடாபி தலைமறைவானார். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த சண்டையில் கடாபியின் ஒரு மகன் வபாத்தானார்.


கடாபியின் சொந்த ஊரான சிர்டியில் ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் கடாபி ஆதரவாளர்கள், கிளர்ச்சியாளர்கள் மீது, கடந்த ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால், கடாபி இங்கு பதுங்கியிருக்கலாம் என்பதால், தேடுதல் வேட்டையும் நடந்தது. இந்நிலையில்  அங்கு நடந்த கடும் சண்டையில், கடாபியின் அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த அபுபக்கர் யூனுஸ் வபாத்தானார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுடன் கடாபி பிடிபட்டார். உடனடியக அவர் ஒரு லாரி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டா. இருப்பினும், வழியிலேயே அவர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. பிடிபட்ட போது கடாபி காக்கி நிற சீருடை அணிந்திருந்ததாகவும், அவரது இரண்டு கால்களும் பலத்த காயமடைந்திருந்ததாகவும் கிளர்ச்சிப் படையினர் தெரிவித்தனர். இந்த சண்டையில், கடாபியின் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


சிர்டியில் நடந்த சண்டையில் கிளர்ச்சியாளர்கள் தரப்பிலும் ஏராளமானவர்கள் வபாத்தானார்ள்ளனர். கடாபி கொல்லப்பட்டதும், அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களை வீடு வீடாக தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் கொண்டாட்டம்:
 கடாபி வபாத்தான செய்தியை கேட்டு கிளர்ச்சியாளர்கள், நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடாபியின் பச்சை நிற கொடியை எரித்து, புதிய தேசியக் கொடியை, விளக்கு கம்பங்களில் பறக்க விட்டுள்ளனர். வாகனங்களில் செல்லும் அனைவரும் வெற்றிச் சின்னத்தை காட்டி கோஷமிட்டவாறு செல்கின்றனர். கடாபி படையுடன் சண்டையிட்ட கிளர்ச்சிப் படையினர் தங்கள் துப்பாக்கியில் குண்டுகள் தீரும் வரை வானத்தை நோக்கி சுட்டு, தங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தலைநகர் டிரிபோலியில், மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். கிளர்ச்சிப் படையின் சார்பில், தற்போது இடைக்கால பிரதமராக மஹ்மூத் ஜிப்ரில் உள்ளார். நாடு விடுதலை அடைந்து விட்டதாக இடைக்கால கவுன்சிலின் உயர் அதிகாரி அப்துல் ஜலீல் தெரிவித்துள்ளார். எட்டு மாதங்களுக்குள் லிபியாவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும், ஜலீல் குறிப்பிட்டுள்ளார். 



பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், "கடாபி பிடிப்பட்ட செய்தியை தெரிந்து கொண்டதாகவும், அவர் கொல்லப்பட்ட செய்தி இன்னும் உறுதி படுத்தப்படவில்லை' என்றார்.


ஜனநாயகம் மலருமா? கடாபி ஆட்சியில் இருந்தவரை லிபியாவில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த கட்சியும் இல்லை. தற்போது போராட்டம் நடத்தும், கிளர்ச்சி தலைவர்களுக்குள் நிறைய பாகுபாடுகள் உள்ளன. அவர்களுக்குள் இனவேறுபாடு குறித்த சர்ச்சை உள்ளது. எனவே, அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குமா என்பது தற்போதைய நிலையில் கேள்விக்குறியாக உள்ளது.


சுடாதீங்க... சுடாதீங்க...: சிர்டி நகரில் பதுங்கியிருந்த கடாபி, ஒரு குழிக்குள் பதுங்கியிருந்ததாகவும், அவரை முற்றுகையிட்ட போது சுடாதீர்கள், சுடாதீர்கள், என கெஞ்சியதாக கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளனர்.
கடாபியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க துப்பாக்கியை கிளர்ச்சியாளர்கள் கையில் ஏந்தி ஊர்வலமாக எடுத்துசென்றனர்.


வபாத்தான கடாபியின் உடல் பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சி படையின் ராணுவ அதிகாரி முகமது அப்துல் கபி தெரிவித்துள்ளார். துனிசியா, எகிப்து நாடுகளை தொடர்ந்து லிபியாவில் ஏற்பட்ட கிளர்ச்சியால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சிரியா மற்றும் ஏமன் நாடுகளில் கிளர்ச்சிபடையினரின் போராட்டம் தொடருகிறது.
News: Yarlmuslim

0 comments:

Post a Comment