சந்தேக நபரான கணவனைக் கைது செய்யவந்த பொலிஸார் மீது வீட்டில் வளர்த்த நாய்களை ஏவிவிட்டு அவர்களை வீட்டிற்குள் வராது தடுத்ததுடன் கணவனையும் வீட்டின் பின்புறமாக ஓடித்தப்பிக்கச் செய்த பெண்ணுக்கு காலி நீதிவான் தாமர தென்னக்கோன் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தார்.கசிப்பு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் செல்லாமல் இவர் தலைமறைவாகியிருந்தார். இவரைக்கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்கும்படி காலி நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இந்தப் பிடியாணையுடன் பொலிஸார் சந்தேக நபரின் வீட்டுக்குக் கைது செய்யச் சென்றனர்.
அதன்போது அவரின் மனைவி வீட்டில் நின்ற இரு நாய்களை பொலிஸாரை நோக்கி ஏவிவிட்டார். இதனால் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்யாமல் திரும்பியதுடன் பெண் மீது வழக்குத் தொடர்ந்தனர். இவர்மீது நீதிமன்ற உத்தரவை செயற்படுத்த தடுத்ததாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது.
News: Yarlmuslim



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment