Sunday, October 30, 2011

மாலைதீவிற்கு விபச்சாரத்திற்காக பெண்கள் ஏற்றுமதி

Best Blogger Tips
மாலைதீவிற்கு விபச்சாரத்திற்காக தனது மனைவியையே அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூடவே விபச்சார தொழிலுக்கென இலங்கைப் பெண்களை மாலைத்தீவுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த ஒரு குழுவினரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது 5 விபச்சார பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
.
மாதம் ஒன்றிற்கு இரண்டு, மூன்று பெண்கள் சுற்றுலா விசாவில் மாலைத்தீவுக்கு தொழிலுக்கென அனுப்பி வைக்கப்படுவதாகவும் அவர்கள் மலே நகரில் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் மாலைத்தீவு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
.
இந்த ஏற்றுமதி தொழிலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் தனது 19 வயது மனைவியை விபச்சாரத்திற்கென மாலைத்தீவு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவருடன் சேர்த்து மேலும் 6 பேர் கைது ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

0 comments:

Post a Comment