“நாங்கள் வரலாற்றை மீள எழுத விரும்பவில்லை. ஆனால் ஹிட்லர் தப்பிச்சென்றமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளதை எமக்கு கிடைத்த ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக உள்ளன’ என அவர் தெவிக்கிறார். ஹிட்லரும் அவரது காதலி ஈவாபிறவுணும் இறந்தமைக்கான இரசாயன பரிசோதனை மேற்கொள்ளப்படாத நிலையில், அவர் பெர்லின் நகரில் தற்கொலை செய்து கொண்டதை நேரில் கண்டதாக கூறுபவர்களின் சோடிக்கப்பட்ட கதைகளை நம்புவது ஏற்புடையதல்ல என வில்லியம்ஸ் கூறுகிறார் .
ஹிட்லரும் அவரது காதலியான ஈவாபிறவுணும் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜேர்மனியை விட்டு சென்று பாஸிஸவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த ஆர்ஜென்டீனாவில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கும் வில்லியம்ஸ், அந்நாட்டில் ஹிட்லர் 17 வருடங்கள் வாழ்ந்ததாகவும் அவருக்கு இதன்போது இரு பெண் குழந்தைகள் பிறந்ததாகவும் தெரிவிக்கின்றார் .
1962 ஆம் ஆண்டு ஹிட்லர் மரணமடைந்ததாக வில்லியம்ஸ் மற்றும் சிமொன்டங்ஸ்டன் ஆகியோரால் கூட்டாக எழுதப்பட்ட “கிரே வூல்ப்’ என்ற இந்த புதிய புத்தகம் கூறுகிறது. ஹிட்லர் இறந்தமை குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆவணங்களிலிருந்து தம்மால் பெறப்பட்ட சான்றுகளை ஏன் அமெக்க புலனாய்வு குழுவினர் அலட்சியம் செய்தனர் என மேற்படி புத்தகம் கேள்வி எழுப்பியுள்ளது. பெர்லின் நிலக்கீழ் அறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்லரது என கூறப்படும் மண்டையோடு உண்மையில் இளம் யுவதியொருவருக்கு சொந்தமானது என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளமை தொடர்பிலும் வில்லியம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
1945 ஆம் ஆண்டு பெர்லின் நகரிலுள்ள நிலக்கீழ் அறையொன்றில் ஹிட்லர் இறந்ததாக அமெரிக்க எழுத்தாளர்கள் உமை கோருகின்றனர். ஆனால் புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆவண ஆராய்ச்சிகள் மற்றும் இரசாயன பரிசோதனைகள் என்பவற்றின் முலம் ஹிட்லர் தனது இறுதிக் காலத்தை ஆர்ஜென்டீனாவில் கழித்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக புதிய தகவல்கள் கூறுகின்றன. இது நிரூபிக்கப் பட்டால் அமெரிக்காவும், இஸ்ரேலும் தெரிவித்து வரும் பல தகவல்கள் பொய்யாமும் வாய்ப்புள்ளது.
News: ourummah




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment