Monday, October 24, 2011

கடலில் கால் கழுவியவர் அலையில் சிக்கி வபாத்தானார்

Best Blogger Tips
கடலின் கரையில் இறங்கி தனது கால்களைக் கழுவியவரை திடீரென வந்த அலை இழுத்துச்சென்று அவர் மரணமான சம்பவமொன்று திக்குவலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வபாத்தானவர் 57 வயதுடைய பொத்துவிலைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது என அடையாளர் காணப்பட்டுள்ளார். பள்ளிவாசலில் வேலைசெய்துவரும் இவர் வழமைபோல கடற்கரைக்குச் சென்று கடலில் கால்களை கழுவிக் கொண்டிருக்கையிலேயே இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவரது ஜனாஸா நேற்ற ஞாயிற்றுக்கிழமை கடற் பாறைக்குள் சிக்குப்பட்டிருந்த நிலையில் மீளவாகளால் மீட்கப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

News: Yarlmuslim

0 comments:

Post a Comment