மாளிகாவத்தைப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதலானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.இதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெவித்துள்ளார். இதற்கு எதிராக மனித உமை மீறல்கள் ஆணைக்குழுவில் புகார் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெவிக்கையில், கடந்த சனிக்கிழமை மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் வீதி அப்பள் வத்த நூரானியா தொடர்மாடி பிரதேசம் பூங்கொடி தோட்டப் பிரதேசங்களை அதிகாலை 4.00 மணியளவில் சுற்றி வளைத்த விசேட அதிரடிப் படை யினர் மற்றும் பொலிசார் மக்களை சிரிசேன மைதானத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
சிலர் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்றைய தினம் 8.00 மணிவரை இச் சுற்றிவளைப்பு நடைபெற்றுள்ளது. இதனால் முஸ்லிம்கள் தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல முடியவில்லை. மாணவர்கள் விசே ட வகுப்புகளுக்கு செல்ல முடியவில்லை.
பாதாள உலகக் கோஷ்டியினரை தேடியே சுற்றிவளைப்பு நடத்தப்படுவதாக படையினர் மக்களிடம் தெவித்துள்ளனர்.
அப்படியானால் கடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தல் காலத்தில் ஜனாதிபதி, பாது காப்பு செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் இப்பகுதிக்கு வந்து சென்றார்கள். அதற்கு முன்பதாக இச் சுற்றிவளைப்பை நடத்தியிருக்கலாமே? இதிலிருந்து அரசியல் பழி வாங்கல்கள் என்பது நன்கு புலனாகிறது.
மாநகர சபைத் தேர்தலில் இப் பிரதேச மக்கள் ஐ.தே.கட்-சி-க்கு வாக்களித்தமையே இச்சுற்றிவளைப் பிற்கு காரணமாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் மனித உமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment