Monday, October 24, 2011

தந்தையை கொன்றவர்களை பழி வாங்குவேன்! கடாபி மகன் சபதம்

Best Blogger Tips
என் தந்தையை (கடாபியை)  கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று கடாபியின் மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் ஆவேசமாக சபதம் செய்துள்ளார்.
லிபியாவில் சிர்த் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட கடாபிக்கு 2 மனைவிகள் மூலம் 7 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.
அவர்களில் 2 பேர் தங்கள் குடும்பத்துடன் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். நேட்டோ படை குண்டு வீச்சில் ஒருவர் பலியாகிவிட்டார். முட்டாசிம் என்ற மகன் கடாபியுடன் கொல்லப்பட்டார்.
மற்றொரு மகனான சயீப் அல்- இஸ்லாம் என்பவர் தலைமறைவாகி விட்டதால் உயிருடன் இருக்கிறார்.
அவர் சிரியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தனியார் டி.வி.யில் திடீரென தோன்றி தனது ஆதரவாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 

அதன்போது, ’’நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபியா மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன்.
என் தந்தையை (கடாபியை) கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது’’ என்று ஆவேசமாக பேசினார்.

0 comments:

Post a Comment