லிபியாவின் நீண்ட கால கொடுங்கோலாட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. லிபிய மக்களின் வரலாற்றில் இது முக்கியமான தருணம் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் லிபியாவில் ஜனநாயகத்தை தோற்றுவிப்பதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் தாம் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சேர்ட் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்டிருந்தார். கடாபியின் புதல்வர்களில் ஒருவரான முட்டாசிம் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றைய புதல்வரான சயீஃப் இஸ்லாம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை முஅம்மர் கடாபி உயிருடன் பிடிக்கப்பட்டிருந்ததாகவும், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்வதற்கு முன்னர் அவர் உயிரிழந்ததாகவும் லிபியாவின் இடைக்காலப் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை லிபிய மக்களுக்கான அனைத்து உதவிகளையும் தாம் வழங்குவதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. லிபிய மக்கள் அமைதியான சூழலில் வாழ்வதே தமது எதிர்பார்ப்பு எனவும் இந்தியா தெரிவிக்கின்றது. 42 வருட காலமாக ஆட்சிபீடத்தில் இருந்த கடாபி வீழ்த்தப்பட்டதன் பின்னர், அனைத்து நாடுகளும் லிபியா மீது கவனத்தை திருப்பியுள்ளன.

Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment