Friday, October 21, 2011

''மகள் என்ன பாவம் செய்தாள்..?'' - இலங்கை எங்கே செல்கிறது..??

Best Blogger Tips
தம்புத்தேகம - களுந்தேகம பிரதேசத்தில் தந்தை மேலும் மூவருடன் இணைந்து தனது 10 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள கேவலமான கீழ்த்தரமான சம்பவமொன்று ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 31ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வில்கமுவ - இமாடுவயாய பகுதியில் 09 வயது சிறுமி மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர் மீது பாலியல் வல்லுறவு புரியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று லக்கல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் அரலகங்வில அலுத்ஓய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலன்னறுவை பொலிஸார் அவரை இன்று பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளனர்.

0 comments:

Post a Comment