பாடசாலை நேரத்தைப் பிற் பகல் மூன்று மணிவரை நீடிப்பதற்கான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும். தற்போதும்கூட நாட்டிலுள்ள சில அரச பாடசாலைகளில் 3 மணிவரை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் இதுதொடர்பாக மேலும் கூறியவை வருமாறு.காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை நேரமாகும். இந்த நிலையில், மாணவர்களின் நன்மை கருதி பாடசாலை நேரத்தை 3 மணிவரை அதிகரிக்க அமைச்சு பேச்சுகளை முன்னெடுத்தது.
எனினும், அது தொடர்பாக இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. விரைவில் அது குறித்தான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். நாட்டின் சில பகுதிகளிலுள்ள அரச பாடசாலைகள் பிற்பகல் 3 மணிவரை திறந்திருக்கின்றன. 3 மணிவரை மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அதேபோன்று மாணவர்களின் நன்மை கருதி பாடசாலை கல்வி நேரத்தை மாலை 5 மணிவரையிலும் அதிகரிப்பதற்கான அதிகாரம் அதிபர்களுக்கு உண்டு.
பாடசாலை அதிபர்கள் விரும்பினால், மாலை 5 மணிவரை பாடசாலையை திறந்துவைத்திருந்து மாணவர்களுக்குக் கற்பித்துக் கொடுக்கமுடியும். இவை அனைத்தும் மாணவர்களின் நன்மைக்கே என்றார் அமைச்சர்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment