Thursday, November 3, 2011

வடக்கு மக்களுக்கு அமைச்சர் பஸில் கொடுத்ததை, அமைச்சர் சம்பிக்க பிடுங்கினார்

Best Blogger Tips
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வால் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம் பிக்க ரணவக்க நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாழ்விடங்களில் மீளக்குடியமர்ந்த பின்னர் அவர் களது மின்சார இணைப்புகளை வடக்கின் வசந்தம்' திட்டத் தின் கீழ் இலங்கை மின்சார சபை இலவசமாக வழங்கி வந்தது. அத் துடன் அவர்களுக்கு ஒரு வருடத் துக்கு இலவசமாக மின்சார விநியோகமும் அந்த திட்டத் தின் கீழேயே செயற்படுத்தப்பட்டது.இருப்பினும் தற்போது மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் செயலாளரினால் 01.10.2011 அன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக் கையின்படி இலவச மின்சார இணைப்புகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.

மீளக்குடியேறிய மக்களுக்கு அவர்களது வீடுகளுக்கு இலவல மின்விநியோகம் வழங்கக் கூடாது. அத்துடன் அவர்களுக்கு இனி ஒரு வருடத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட மாட்டாது. மேலும் பாடசாலைகள் உட்பட அரச நிர்வாக அலுவலகங்களுக்கும் இனி இலவச மின்சார விநியோகம் இல்லை. இவையனைத்தும் சுற்றறிக்கை அனுப்பட்டதிலிருந்து நடைமுறைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட இலவச மின்சார விநியோகமும் இலவச மின்னிணைப்பும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மீளக்குடியமர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியு ள்ளனர்.வன்னி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்ந்தவுடன் இலவச மின்னிணைப்புக்காக விண்ணப்பித்தும் அதற்கான பொருள்கள் இல்லாததால் வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டது. தற்போது அந்த மக்களும் இந்தப் புதிய சுற்றறிக்கை ஊடாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment