தமிழ், முஸ்லிம் வர்த்தகர்களை முடக்கிய அரசாங்கம், சிங்கள வர்த்தகர்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இன்று இறங்கியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆவணசட்ட முல இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளார்.
அங்கு உரையாற்றியுள்ள அவர் நீலமா சிவப்பா நிறங்கள் பிரச்சினையில்லை. நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அப்பாவி மக்களிடமிருந்து கொள்வனவு செய்கின்ற பால் பக்கற்றுக்கு வரி அறவிடு-கின்ற அரசாங்கம் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகின்ற 18 கப்பல்கள், தங்கம், பணம் குறித்து மௌனம் காத்து வருகின்றது.
தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அரச குண்டர்களையே வளர்க்கின்றது. குண்டர்களின் அரசியல்தான் இன்று இடம் பெறுகிறது 1950, 56, 70, 77 களில் என்ன நடந்தது. ரணிலின் குடும்பத்துக்கு சொந்தமான லேக் ஹவுஸ் கூட அரசுடமையாக்கப்பட்டது இன்று 38 நிறுவனங்களை பறிதல் செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இது சிங்கள வர்த்தகர்களை இல்லாதொழிக்கும் சதித்திட்டமாகும்.
அரசு மூடிய பொருளாதாரத்தையே முன்னெடுக்கிறது எனினும் நாம் திறந்த பொருளாதாரத்தை பற்றியே பேசுகிறோம். முகாபேயின் வழிறைகளைத்தான் இந்த அரசும் இன்று முன்னெக்கின்றது. நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை பொறுபெடுப்பது என்றால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, மிஹின் லங்கா போன்றவற்றின் நஷ்டங்களை தலில் சரி செய்ய வேண்டும்.பாதிக்கப்படும் வர்த்தகர்கள் நீதிமன்றத்துக்குக் கூட செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்களை பிரச்சினைக்குட்படுத்தி நாட்டின் பொருளாதாரத்துடன் விளையாட வேண்டாம்.
கே.பி. யிடம் இருந்து மீட்டெடுத்த கப்பல்கள் கைப்பற்றப்பட்ட பணம் எங்கே என்று தெயாது. எனினும் அப்பாவி மக்களின் கோதுமை மாவிலும் பால்மாவிலும் கைவைக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை நட்டமைந்த தனியார் நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்பும் பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு உண்மையில் ராஜபக்ஷ் அரசாங்கத்தின் தனியார் சொத்து கொள்ளையிடும் சட்டமூலம் எனப் பெயரிடப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இறுதி நேரத்தில் அமைச்சரவையில் சட்டமூலத்தின் பெயர் மாற்றப்பட்டாலும் அதன் உள்ளடக்கத்தில் மாற்றம் இல்லை என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் குறிப்பிட்துள்ளார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment