சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை ஊரார் கோழியறுத்து உம்மா பெயரால் கத்தம் ஓதாது என நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மட்டு ஓட்டமாவடி, மீறாவோடை பிரதேசத்தில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்திருப்பதாவது,
முஸ்லிம் காங்கிரஸின் தலைவராகிய நான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளக் கூடாதென இப்பிரதேச பள்ளிவாசல் ஒலிபெருப்பியில் ஓட்டமாவடி பிரதேச சபைத் தலைவர் அறிவிப்புச் செய்துள்ளார். இதன் பின்நின்று செயற்பட்டவர் முன்னாள் ஒரு அமைச்சர் ஆவார். அரசியல் வங்குரோத்தின் வெளிப்பாடே இது. பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை பள்ளிவாசல் நிருவாகங்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையானது ஊரார் கோழியறுத்து உம்மா பெயரால் கத்தம் ஓதாது. நான் முஸ்லிம் சமய விவகார அமைச்சாராக மூன்றுமுறை இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம். ஒருதடவைக்கூட பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளை எனது தேவைகளுக்காக பாவிப்பதை அனுமதித்தது கிடையாது என்றார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment