Tuesday, November 1, 2011

யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா நிதியுதவியை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை

Best Blogger Tips
பலஸ்தீனத்தை ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக்கொள்வதற்கு ஆதரவாக ஐ.நா.மன்றத்தின் கலாச்சார மற்றும் அறிவியல் கழகமான யுனெஸ்கோ வாக்களித்துள்ளது. யுனெஸ்கோ மன்றக் கூட்டம் பலஸ்தீனம் என்ற பெயரைக் குறிப்பாகப் பயன்படுத்தி முன்வைக்கப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்தன. ஆனாலும் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பாலஸ்தீனர்கள் எடுத்துவருகின்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக தற்போது இது இடம்பெற்றுள்ளது ஐ.நா.வில் பலஸ்தீனத்தை முழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பலஸ்தீன அப்பாஸ் நிர்வாகத்தினர் சென்ற மாதம் விண்ணப்பித்தனர்
அமெரிக்க விருப்பத்தை மீறி பலஸ்தீனத்தை யுனெஸ்கோ சேர்த்துக்கொண்டுள்ளதால்- யுனெஸ்கோவுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியில் ஏழு கோடி டாலர்களை அது நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment