Sunday, November 13, 2011

நாளை நள்ளிரவு முதல் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்

Best Blogger Tips
நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து சேவையில் இருந்து விலகிக் கொள்வதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில் டிசல் நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்த போதும் அதற்கு எதுவித தீர்வுகளும் கிடைக்காததால் இம்முடிவை எடுத்ததாக கொழும்பில் இன்று இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை உயர்வால் பஸ் உரிமையாளர்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் டிசல் நிவாரணம் வழங்காவிடின் நாளை நள்ளிரவு முதல் சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் நிவாரணம் கேட்டு தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கைக்கு நாளை உரிய பதிலளிக்கப்படும் என தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பீ.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினால் மாத்திரம் பஸ் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

பஸ் கட்டண மாற்றத்திற்கு 12 பூரண காரணங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என தனியார் பஸ் சங்கங்களுடன் இதற்கு முன்னர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த இணக்கப்பாட்டை மீறி செயற்பட முடியாது என சி.பீ.ரட்நாயக்க தெரிவித்தார்.

0 comments:

Post a Comment