Sunday, November 13, 2011

ஈரான் மீது நாடாத்தப்படும் தாக்குதல் பிராந்திய யுத்தமாக வெடிக்கும். ஹிஸ்புல்லாஹ்

Best Blogger Tips
ஹிஸ்புல்லாஹ்”. இன்றைய உலகில் அமெரிக்காவின் உளவமைப்பான சீ.ஐ.ஏ.(C.I.A.) யினால் புகழப்பட்ட இயக்கம். சீ.ஐ.ஏ. ((C.I.A.) இலகுவில் யாரிற்கும் அல்லது எந்த ஒரு அமைப்பிற்கும் புகழாரம் சூட்டி பென்டகனிற்கு அறிக்கை சமர்ப்பித்ததில்லை. ஆனால் ஹிஸ்புல்லாவிற்கு மட்டும் அந்த பாக்கியம் கிடைத்தது. “அவர்கள் பலம் வாய்ந்தவர்கள். சக்தி மிக்கவர்கள். சாணாக்கியமானவர்கள். உலகின் நவீன இராணுவ தொழில் நுட்பங்களை எங்களது மரீன்களிற்கு இணையாக அறிந்து வைத்துள்ள ஆற்றல்மிக்கவர்கள். எனது பார்வையில் இஸ்ரேலிய இராணுவத்தை நிலைகுலைய வைக்கக் கூடியவர்கள் இவர்கள் மட்டுமே. நாம் அரபு நாடுகளை பற்றி அலசுவதைவிட இவர்களை அழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்”. இப்படி அறிக்கை சமர்ப்பித்து அமெரிக்க அதிபர் மற்றும் பாதுகாப்பு கவுன்ஸில் உறுப்பினர்களான சீப் ஒப் ஸ்டாப் முன்னிலையில் பேசியவர் முன்னாள் சீ.ஐ.ஏ. இயக்குனர் Porter Johnston Goss (Director of the Central Intelligence Agency and Director of National Intelligence) ஆவார்.

இந்த ஹிஸ்புல்லாவின் தலைவர் ஷெய்ஹ் நஸ்ருல்லா அவர்கள் நேற்றைய தினம் அவரத அமைப்பினால் நடாத்தப்படும் “அல் மனார்” தொலைக்காட்சியில் விடுத்த அறிக்கையில் “ஈரான் மீது நாடாத்தப்படும் தாக்குதல் பிராந்திய யுத்தமாக வெடிக்கும். நாம் அந்த பணியை முன்னெடுப்போம். ஈரான் மட்டுமல்ல சிரியா மீது தாக்குதல் நடாத்தினாலும் நாம் அதைத்தான் நாம் செய்வோம். ஈரான் எந்தவித யஹீதி, நஸரானி சக்திகளின் தாக்குதலிற்கும் எதிராக உதவ தயாராகவே உள்ளோம். ஹிஸ்புல்லாஹ் ஈரான் மக்களுடன் எப்போதும் இருக்கும். அது போலவே லெபனான், சிரியா, பலஸ்தீன் மக்களுடனும் உடன் இருக்கும். அவர்கள் தாக்கினால் நாம் இஸ்ரேலை தாக்க தயங்கமாட்டோம் என அறைகூவல் விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் ஏகூட் பாராக் (Defense Minister Ehud Barak) நேற்று முன் தினம் டெல் அவீவில் வைத்து மேற்கத்தைய ஊடகவியளார்களை சந்தித்து பேசுகையில் “நாம் ஈரானுடன் தாக்குதல் நடாத்தினால் அதில் 500 இற்கும் குறைவான எமது வீரர்களே கொல்லப்படுவர்” என சிரித்தவாறு கருத்து வெளியி்ட்டிருந்தார். இவரது இந்த பேச்சை பற்றி கருத்து வெளியிட்ட நஸ்ருல்லாஹ் “நாம் லெபனான் யுத்தத்தின் போது 1000 இற்கும் அதிகமான ஸியொனிஸ இராணுவத்தை அழித்தொழித்தோம். இறைவனருளால் அப்போது அவர்களை முற்று முழுதாக நிர்மூலம் செய்யும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த லெபனான் சண்டையில் அமெரிக்காவின் பல நவீன ரக இராணுவ டாங்கிகள் இல்லாதொழிக்கப்பட்டதை நாம் அறிந்திருப்போம். நஸ்ருல்லாவின் இந்த பகிரங்க கருத்தானது அவர்களிடத்தில் ஒரு திட்டம் இருப்பதை உணர்த்துவதாக உள்ளது. ஈரான் மீதான தாக்குதல் முழு மத்திய கிழக்கின் சமநிலையை குழுப்புவதாக அமையப்போகிறது. அதில் ஈரானிய அரசு நம்பி நிற்கும் பிரதான ஆயுதம் “ஹிஸ்புல்லாவாகும்”.

முஸ்லி்ம் உம்மாவும் முஸ்லிம் நாடுகளும் என்ன செய்யப்போகின்றன?. ஷியாக்கள் தானே என சந்தோஷிக்கப் போகிறார்களா? அல்லது “லா ஷியா லா சுன்னி இஸ்லாமி இஸ்லாமி என ஒன்றினையப் போகிறார்களோ?

0 comments:

Post a Comment