லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் புதல்வர்களில் ஒருவரான
சயீவ் அல் இஸ்லாம், சஹாரா பாலைவனத்தின் மணற்குன்றுகளுக்கிடையில்
மறைந்திருக்கலாம் கூறப்படுகிறது.
லண்டனில் கல்வி கற்ற 39 வயது பொறியியலாளரான சயீவ் அல் இஸ்லாம, கேணல்
கடாபியின் பிரதான அரசியல் வாரிசாக கருதப்பட்டவர்; தற்போது
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றமிழத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேணல் கடாபி கொல்லப்பட்டதையடுத்து கடந்த 28 ஆம் திகதிக்குப்பின் சயீவ் அல்
இஸ்லாமின் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் எதுவும்
வெளிவரவில்லை.
சயீவ் அல் இஸ்லாமும் லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பொறுப்பாளர்
அப்துல்லா அல் செனோஸியும் லிபியாவிலிருந்து வெளியேறுவதற்காக வெவ்வேறு
வாகனத் தொடரணிகள் மூலம் சஹாரா பாலைவனத்திற்கூடாக பயணம் செய்ததாக செய்திகள்
வெளியாகின. ; இவர்களின் பயணத்திற்கு பாலைவனத்தில் தாக்குப்பிடித்து
வாழ்வதில் அனுபவம் கொண்ட டுவாரெஜ் இனத்தைச் சேர்ந்தவர்கள்
பாதுகாப்பளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் தனிமையான பாரிய பிரதேசமொன்றில் அவர்
இருப்பதாக மணற்குன்றுகளுக்கிடையில் அவர் பல மாதங்களுக்கு மறைந்து வாழ
முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அல் இஸ்லாம் அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடொன்றில் அடைக்கலம் கோரக்கூடும் என எதிர்பார்கக்ப்படுகிறது.
மாலி நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராஹிம் அக் மொஹமட் அஸாலேஹ் இது தொடர்பாக
கூறுகையில், எனது புதிய தகவல்களின்படி அவர் மாலி நாட்டில் இல்லை. அதேவேளை
நைஜரிலும் இல்லை என்றார்.




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment