Wednesday, December 7, 2011

ஒஸாமா கின்லேடன் குடும்பம் சவுதி அரேபியா செல்கிறது..?

Best Blogger Tips
பாகிஸ்தானில் தங்கி இருந்த அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வீட்டில் இருந்த பின்லேடனின் மனைவிகள், குழந்தைகள் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இது நிறைவடைந்து விட்டால் இவர்களை சொந்த நாடான சவூதி அரேபியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் ஏற்பாடு செய்து வருகிறது. தனி விமானம் மூலம் இவர்கள் 2 நாளில் அனுப்பப்படுகிறார்கள். இந்த தகவல்களை அல்-ஹயாத் அரபிக் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ஆனால் பின்லேடன் குடும்பத்தினரை அனுப்பி வைக்கும் திகதியை பாகிஸ்தான் அதிகாரிகள் ரகசியமாக வைத்துள்ளனர். சவூதி அரேபியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதர் அப்துல் அkஸ் இப்ராகிம் கூறுகையில், எனக்கு இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றார். பின்லேடனின் மூத்த சகோதரர் பக்கீர் பின்லேடன் சவூதி அரேபியாவில் இருக்கிறார். அவரது கோரிக்கை மனுவை சவூதி மன்னர் அப்துல்லா ஏற்றுக் கொண்ட பின்னரே இந்த ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரியவருகிறது. 

இதை பின்லேடன் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்தனர் என்றும் தகவல்கள் கூறுகிறது.

0 comments:

Post a Comment