இலங்கையில் போலியான பேஸ் புக் (FACE BOOK) கணக்குகளை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்ட பேஸ் புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேறும் நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தல், அவர்களின் தரவுகளை பயன்படுத்தல், நிதி மோசடிகளில் ஈடுபடல், கப்பம் கோரல், அச்சுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பில் 650 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இலங்கை கணனி அவசர தொழிற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
பேஸ் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் 750 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் 650 போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பேஸ் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பில் நாள்தோறும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
News:Lankasri




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment