Sunday, May 8, 2011

மே மாதத்தினுள் உலகெங்கும் ஏழு பூமியதிர்வுகள் ஏற்படலாம்: பேராதனை பல்கலைக்கழக நிபுணர்கள் கருத்து

Best Blogger Tips

இம்மாதத்திற்குள் உலகெங்கும் ஏழு பூமியதிர்வுகள்  மட்டில் ஏற்படலாம் என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் ஆய்வு நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
1900ம் ஆண்டுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட புவியதிர்வு தொடர்பான தரவுகளைக் கொண்டு புவியதிர்வொன்று ஏற்படமுன்னர் தங்களால் அதனை எதிர்வு கூறமுடியுமென்று அவர்கள் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தனர்.
அதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் தொடர்பில் அவர்கள் முன்னறிவித்த புவியதிர்வுகள் தொடர்பான எதிர்வுகூறல்களில் தொண்ணூறு வீதம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைப் போன்று மே மாதத்திலும் மொத்தம் ஏழு பூமியதிர்வுகள் அளவில் உலகெங்கும் பரவலாக நிகழக்கூடும் என்று எதிர்வு கூறியுள்ள பேராதனை பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்கள், இலங்கைக்கு அவற்றால் பாதிப்புகள் வராது என்றும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment