Sunday, May 22, 2011

டுபாயில் பணியாற்றிய இலங்கைப் பெண் சுருக்கிட்டு தற்கொலை

Best Blogger Tips

டுபாயில் பணியாற்றி வந்த இலங்கைப் பெண் ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முந்தல் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
டுபாயில் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது என குறித்த பெண் பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்திருந்ததாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளனர்.
எனினும், போதியளவு பணம் இல்லாத காரணத்தினால் பெண்ணை நாட்டுக்கு திருப்பி அழைக்க முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த பெண்ணின்; சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க ஐந்து லட்ச ரூபா கோரியதாக பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டு;ளளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
News:Lankasri

0 comments:

Post a Comment