Saturday, May 21, 2011

பேஸ்புக்கில் உள்ள "Like" சுட்டியால் கவரப்பட்டு அதையே பெயராக வைத்த தம்பதி

Best Blogger Tips
பேஸ்புக் சமூக வலைபின்னலில் "Like" என்ற சுட்டியின் ஊடாக மற்றவர்களால் அனுப்பப்படும் படங்கள் உட்பட ஏனைய விடயங்கள் பற்றி நாம் கருத்துக்களை முன்வைக்கலாம்.
இதனால் பெரிதும் கவரப்பட்ட ஒரு இஸ்ரேலிய ஜோடி தமது குழந்தைக்கு "Like" என்று பெயரும் வைத்துவிட்டனர். குழந்தை பிறந்ததும் அதற்கு வித்தியாசமாகப் பெயர் வைக்க வேண்டும் என்று பலரும் யோசிப்பதுண்டு.

இந்தத் தம்பதியும் அப்படி யோசித்தபோது தான் பேஸ்புக் விடயம் அவர்கள் நினைவுக்கு வந்தது. உடனே எதுவும் யோசிக்காமல் குழந்தைக்கு அப்படியே பெயர் வைத்துவிட்டனர்.
இது நவீனமான ஆக்கபூர்வமான இதுவரை உலகில் யாருக்கும் இல்லாத பெயர் என்று பெற்றோர் பெருமையுடன் கூறுகின்றனர். இது அன்புக்கும் சமமான ஒரு சொல்லாக இருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் பெற்றோர் உள்ளனர். மாரிவ் என்ற உள்ளூர் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment