இந்நிலையில் இந்தாண்டில் மிகவும் எளிமையான முறையில் தனது திருமணத்தினை நடத்தவுள்ளார் பூட்டான் நாட்டு மன்னர். வரும் அக்டோபர் மாதம் கல்லூரி மாணவி ஒருவரை கரம் பிடிக்கிறார்.
இவரது திருமணம் சாதராண குடும்பத்தில் நடப்பது போன்று மிகவும் எளிமையான முறையில் நடக்கவுள்ளதாக பூட்டான் அரண்மணை வட்டாரம் கூறியுள்ளது. பூட்டான் மன்னராக இருப்பவர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் வாங்சூக்(31).
இவர் கடந்த 2008ம் ஆண்டு பூட்டான் நாட்டின் மன்னராக தனது தந்தை ஜிக்மிசெங்கியீ முடிதுறந்ததையடுத்து பொறுப்பேற்றார். இந்நிலையில் பூட்டான் பாராளுமன்ற கூட்டம் திம்புவில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசுகையில் மன்னர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால் பேசியதாவது: என் மனதை கவர்ந்த ஜெட்சன்பெய்மா என்ற மாணவியை நான் திருமணம் செய்யவுள்ளேன். எனக்கு வரப்போகும் மனைவி படித்த பெண்ணாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் எதிர்பார்த்த அனைத்து தகுதிகளையும் கொண்ட பெண்ணாக ஜெட்சன்பீமாவிடம் உள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் எங்கள் திருமணம் மிகவும் எளிய முறையில் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறிதுடன் தனது வருங்கால மனைவி ஜெட்சன்பீமாவுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தினையும் காண்பித்தார் மன்னர் ஜிக்மி கெய்சர்நெம்ஜியால்.
இது குறித்து பூட்டான் பிரதமர் ஜிக்மி தைன்லி கூறுகையில்,"மன்னரின் திருமணத்தை நாடோ ஆவலோடு எதிர்பாக்கிறது" என்றார். இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெறவிருப்பதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன
News:Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment