Monday, May 23, 2011

நாமல் ராஜபக்ஷவின் இணைப்பாளரது வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் கைது

Best Blogger Tips

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் இணைப்பாளரது வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களில் இருவர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
பெலியத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இணைப்பாளரின் வீட்டின் மீது ரீ56 ரக துப்பாக்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தங்காலை காவல் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
News:Lankasri

0 comments:

Post a Comment