Sunday, May 22, 2011

கதிர்வீச்சு கலந்த நீரை வெளியேற்ற ராட்சத தெப்பம் நன்கொடை

Best Blogger Tips
ஜப்பானில் அணுமின் நிலையத்தில் சேர்ந்துள்ள கதிர்வீச்சு கலந்த தண்ணீரைப் பாதுகாப்பாக வெளியேற்ற ராட்சத தெப்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
ஜப்பானில் மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் வடகிழக்குப் பகுதியிலுள்ள புகுஷிமா அணு உலை முற்றிலும் சேதம் அடைந்தது. அங்கிருந்த மூலக்கூறுகள் உருகத் தொடங்கின. கதிர்வீச்சுப் பரவியதால் 20 கி.மீ சுற்றளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
அணு உலைகளில் இருந்த பாதுகாப்புத் திட்டங்கள் முழுவதும் சேதமடைந்ததால் மூலக்கூறுகளில் வெப்பம் கடுமையாக உயர்ந்தது. இது வெடித்துச் சிதறி பேரழிவு ஏற்படும் அபாயம் எழுந்தது.
வெப்பத்தைத் தணிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் கடல் நீரை அணு உலைகள் மீது இரைத்தனர். இரண்டு மாதங்களாக நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இதனால் அங்கு ஏராளமாக கதிர்வீச்சுள்ள நீர் சேர்ந்துள்ளது. 90 ஆயிரம் டன் அளவு கதிர்வீச்சு கலந்துள்ள நீர் இங்கு உள்ளது.
அதைப் பாதுகாப்பான நீராக மாற்றவும், அதை வெளியேற்றவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஷிசுவோகா நகராட்சி புகுஷிமா அணுமின் நிலையத் துறைமுகத்துக்கு ஒரு ராட்சத தெப்பத்தை அனுப்பியுள்ளது. இது 136 மீற்றர் நீளமும், 46 மீற்றர் அகலமும், 3 மீற்றர் உயரமும் உடையது. இதில் 10 ஆயிரம் டன் நீர் கொள்ளளவு உள்ளது.
இதன் மூலம் சிறிது சிறிதாக கதிர்வீச்சு பரவிய நீரைப் பாதுகாப்பாக வெளியேற்ற புகுஷிமா அணுமின் நிலையத்துக்கு நன்கொடையாக ஷிசுவோகா நகராட்சி வழங்கியுள்ளது
News:Lankasri

0 comments:

Post a Comment