Friday, May 20, 2011

சர்வதேச நிதியமைச்சருக்கு சிறைத் தண்டனை

Best Blogger Tips
பாலியல் குற்றச்சாட்டில் கைதான சர்வதேச நிதியமைப்பின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கானுக்கு நியூயார்க் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து விட்டது.
அதனால் அவர் ரைக்கர்ஸ் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள "சோபிடெல்" என்ற ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்த ஐ.எம்.எப் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் பணிப்பெண் ஒருவரை பாலியல் ரீதியான கொடுமைகளில் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டார்.
நேற்று அவர் நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அரசுத் தரப்பு வக்கீல்கள் வாதிட்ட போது கூறியதாவது: அவர் விடுதலை செய்யப்பட்டால் பிரபல பிரெஞ்சு இயக்குனர் ரோமன் பொலான்ஸ்கி போல பிரான்சுக்கே சென்று சுதந்திரமாக இருப்பார்.
மேலும் அவர் கோடீஸ்வரர். சர்வதேச அமைப்பு ஒன்றின் தலைமைப் பதவியில் இருப்பவர். சம்பவத்தின் போது நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் பிடிபட்டார். ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கமெராக்களின் புகைப்படங்களைப் பார்க்கும் போது அவர் அங்கிருந்து தப்பிச் செல்லும் அவசரத்தில் இருந்ததும் தெரிகிறது.
பொலிஸ் வருவதற்கு முன்பே அவர் அங்கிருந்து தப்பி விட்டார். தனது மொபைல்போனை விட்டு விட்டுப் போய்விட்டார். அந்த போன் பற்றி கேட்பதற்காக அவர் ஹோட்டலுக்கு போன் செய்த போது அவரது குரலில் பதட்டம் இருந்தது.
மேலும் இப்போது அவரை விட்டு விட்டால் பின் பிரான்சில் இருந்து அவரை வரவழைப்பது மிகவும் கடினம். இதுபோன்று பாலியல் வழக்குகளில் சிக்குவது ஒன்றும் அவருக்கு முதன்முறை அல்ல. இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அவரை சிறையில் அடைப்பதே இவ்வழக்கிற்கு பாதுகாப்பானது. இவ்வாறு அரசுத் தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.
இதையடுத்து நியூயார்க் நகரை அடுத்து அமைந்துள்ள ரைக்கர்ஸ் தீவில் உள்ள சிறையில் கான் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் கான் மீது மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கானுக்கு 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்
News:Lankasri

0 comments:

Post a Comment