பெண் பத்திரிக்கையாளர் பர்வசை வான்கூவர் விமான நிலையத்தில உறவினர்கள் கட்டி பிடித்து தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர். அவரது தந்தை கூறுகையில்,"மிகச்சிறந்த பெண்மணியாக டோர்த்தி பர்வஸ் தோன்றுகிறார்" என நெகிழ்வுடன் கூறினார்
.அல்ஜசீரா தொலைக்காட்சியின் ஆங்கிலச் செய்தி பிரிவுக்காக பர்வஸ் பணியில் ஈடுபட்டார். அவரை ஏப்ரல் 29ம் திகதி சிரியா நிர்வாகத்தினர் கைது செய்து ஈரான் அனுப்பினர்.
பர்வசுக்கு ஈரான் குடியுரிமையும் உள்ளது. செவ்வாய்க்கிழமை வரை பர்வஸ் நிலைமை என்னவென்று தெரியாமல் இருந்தது. பர்வஸ் வடக்கு வான்கூவரில் உள்ள தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தான் விடுவிக்கப்பட்ட தகவலை தெரிவித்தார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியின் தலைமையகமான கத்தாரில் இருந்து திரும்புவதாகவும் அவர் கூறினார். வான்கூவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடும்பத்துடன் மீண்டும் இணைந்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என கூறினார். பர்வேஸ் ஒருவித பதட்ட நிலையிலேயே காணப்பட்டார். கைது நிகழ்வு குறித்து மேலும் அவர் விவரிக்கவில்லை.
News:Lankasri



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment