வெசாக் உற்சத்தை முன்னிட்டு இன்னுமொரு தொகுதி விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
தற்போதைக்கு 4360 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்களில் கணிசமானவர்கள் எதிர்வரும் வெசாக் உற்சவத்தை முன்னிட்டு சமூகமயப்படுத்தப்படுவார்கள் என்றும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தமிழ்வின்னுக்குத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களின் தொழில் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வாழ்க்கையை வளம்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டல் தொடர்பான நிகழ்ச்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இவ்வருட இறுதிக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் அனைத்து விடுதலைப் புலி உறுப்பினர்களும் பெரும்பாலும் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்றும் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.



Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment