Sunday, May 8, 2011

சகல பிரதேச செயலக மட்டத்திலும் ரணவிரு கிராமமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானம்

Best Blogger Tips

அனைத்துப் பிரதேச செயலக மட்டத்திலும் ரணவிரு கிராமமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் அனைத்துப் பிரதேச செயல மட்டங்கள் தோறும் அந்தந்தப் பகுதிகளில் இருந்து இராணுவத்தில் இணைந்து போராடி, யுத்தத்தின் போது உயிரிழந்த படைவீரர்களின் பெயர்களில் ரணவிரு கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன.
அதற்காக பிரதேச செயலகங்கள் தோறும் மிகவும் வறிய நிலையில் இருக்கும் கிராமங்களைத் தெரிவு செய்து அதனை ரணவிரு கிராமமாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான செயற்திட்டங்கள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் கிராமத்தின் அனைத்து வீடுகளையும் சகல வசதிகளும் கொண்ட கிராமமாக மேம்படுத்தி, அதனை இறந்து போன இராணுவ வீரரொருவரின் பெயரைக் கொண்ட கிராமமாக மாற்றுவதே அத்திட்டத்தின் நோக்கம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 comments:

Post a Comment