பொலிஸ் திணைக்களத்தின் திறமைவாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரச புலனாய்வுத்துறையும் மற்றும் இராணுவப் புலனாய்வுத்துறையுமே பிரஸ்தாப அறிக்கைகள் இரண்டையும் தயாரித்துக் கையளித்துள்ளன.
அதன் பிரகாரம் விடுதலைப்புலிகளின் பலம் பொருந்திய படையணிகளுள் ஒன்றாக இருந்த ஜெயந்தன் படையணியின் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விடுதலைப் புலிகள் பலமாகச் செயற்பட்ட காலத்தில் கிழக்கில் உருவாக்கப்பட்டிருந்த பிரதான ஆயுதக் களஞ்சியமும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் இருந்த ஆயுதங்களும் முதலமைச்சரின் நேரடிப் பங்களிப்புடன் இரகசிய இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளதாக புலனாய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரஸ்தாப ஆயுதக் களஞ்சியத்தில் விமான எதிர்ப்புப் பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். உடனடியாக பிரஸ்தாப ஆயுதக் களஞ்சியம் அல்லது அதில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டுபிடிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் இந்திய அழுத்தங்களைப் பிரயோகிக்க வைத்து தமிழர்களின் உரிமைகளை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியிருக்கின்றமையும் அரசாங்கத்துக்கு அறவே பிடிக்காத விடயங்களாகிப் போயுள்ளன.
அவற்றுக்கெல்லாம் பழிவாங்கும் வகையிலேயே அவரது கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
News:Lankasri




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment