Friday, May 20, 2011

சரத் பொன்சேகாவின் மகள் அபர்ணா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை

Best Blogger Tips

அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சரத் பொன்சேகாவின் இரண்டாவது மகள் அபர்ணா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
அபர்ணாவின் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றிருந்தது. அதில் கலந்து கொள்வதற்கு சரத் பொன்சேகாவினால் முடியாமற் போன நிலையில் திருமதி அனோமா பொன்சேகா அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார்.

இன்று   அபர்ணா தன் தாயார் அனோமா பொன்சேகாவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது திருமதி சரத் பொன்சேகா மட்டும் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபர்ணாவைத் தடுத்து நிறுத்திய புலன் விசாரணையாளர்கள் நீண்ட நேரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
News:lankasri

0 comments:

Post a Comment