பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு தொடர்பாக அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளர்.
கட்டுநாயக்கவில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலின் போது பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் அதிருப்தியடைந்தே அவர் ஓய்வுபெற முடிவு செய்ததாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடுத்து சுயவிருப்பத்தின் பேரில் ஓய்வுபெறும் முதலாவது அரச அதிகாரி இவர் எனவும் ஹுலுகல்ல தெரிவித்தார். பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய வின் பதவிக் காலம் எதிர்வரும் 18ம் திகதி நிறைவடைய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் 32 ஆவது பொலிஸ் மாஅதிபராக மஹிந்த பாலசூரிய கடந்த 2009 நவம்பர் மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். 1953 ஜூன் 18ம் திகதி பிறந்த அவர் தனது பிறந்த நாளிலேயே ஓய்வுபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதல்களில் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ள நிலையில், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அங்குள்ள மிகப்பெரிய மருத்துவமனையின் இயக்குநருக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தனியார் செய்தி சேவை ஒன்று கூறுகிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்த யார் உத்தரவிட்டார்கள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று ஹாங் காங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.
News:Yarlmuslim




Colombo Time
New Delhi Time
London Time
Doha Time
Riyadh Time
Kuala Lumpur Time
0 comments:
Post a Comment