Tuesday, June 7, 2011

ஒஸாமா மரணித்த போதிலும் ஒபாமாவின் செல்வாக்கில் சரிவு

Best Blogger Tips
 
பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின், அமெரிக்க அதிபர் ஒபாமா செல்வாக்கு அதிகரித்தது. ஆனால், அமெரிக்க பொருளாதார நிலை சீராக இல்லை என்பதாலும், வேலைவாய்ப்பு குறைந்து வரும் போக்கும், அவரது செல்வாக்கை தற்போது கணிசமாக குறைத்து விட்டது.

அமெரிக்காவில், அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் ஒபாமாவும், அவரது குடியரசு கட்சிப் பிரமுகர்களும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாசாசூயட்ஸ் மாநில கவர்னர் மிட் ரோனி, அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறார்.அதிக வேலைவாய்ப்புகள், அதிக அளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்படுவதே தன் லட்சியம் என அவர் பிரசாரம் செய்வதால், அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. ஒபாமா கட்சியிலேயே அவரை முறியடிக்கும் வாய்ப்பாளராக அவர் உருவெடுக்கிறார். 

முன்பு சாராபாலின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு என்ற பேச்சு இருந்தது. இப்போது அப்படி இல்லை.தற்போது, அதிபர் ஒபாமா செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை, "வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி ' இணைந்து நடத்திய சர்வே, ஒபாமா முக்கியத்துவம் குறைந்து வருவதைக் காட்டுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம், வீடுகள் விலை மதிப்பு குறைவு, வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் போக்கு ஆகியவை, மக்கள் மனதில், ஒபாமா அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.அமெரிக்கா, தன் வளர்ச்சிப் பாதையில் இருந்து எதிர்மறையாகச் செல்கிறது என, 90 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். 

தேசிய அளவில் நடந்த கருத்துக் கணிப்பில், ஒபாமாவின் செல்வாக்கு சரிந்திருக்கிறது.சமீபத்தில், பாகிஸ்தானின் அபோதாபாத்தில்,  ஒசாமா பின்லாடனை அமெரிக்க ராணுவம் வீழ்த்திய செயலால், ஒபாமா செல்வாக்கு, அபாரமாக உயர்ந்தது. தற்போது, முற்றிலும் மாறாக அவர் செல்வாக்கு சரிந்திருப்பதை சர்வே முடிவுகள் காட்டுகின்றன.
News:Yarlmuslim

0 comments:

Post a Comment